பொண்ணுங்கன்னா தீட்டா? எந்த கடவுள் சொல்லுச்சு? ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு

 
இ

பெண்கள் என்றால் தீட்டு என்று எந்த கடவுள் சொன்னது என்று  சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.   கடந்த 2011 ஆம் ஆண்டில் அவர்களும் இவர்களும் என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.   மாநாட மயிலாட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார்.   அதன் பின்னர் அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையானார்.

ச

 தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் படக் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க படாதது குறித்து எழுந்த கேள்விக்கு,    பொண்ணுங்கன்னா தீட்டா?  தீட்டு என்று எந்த கடவுள் சொல்லுச்சு? கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் .  ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் கடவுளுக்கு கிடையாது. 

  என் கோவிலுக்குள் இவள்கள் வரலாம் இவர்கள் வரக்கூடாது என்று எந்த கடவுளும் சொல்வதில்லை.  அப்படி எந்த கடவுளாவது சொல்லி இருக்கிறார்களா?  இருந்தால் நீங்களே சொல்லுங்கள்?  எந்த கடவுளும் இது செய்யக்கூடாது இது சாப்பிடக்கூடாது என்று சட்டம் எல்லாம் வைக்கவில்லை.  எல்லாமே மனிதர்கள் உருவாக்கியதுதான். அதனால்தான் நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை என்றவர்,  ஆணாதிக்கம் இப்போது கூட அதிகம் இருக்கிறது.  அதிலும் கிராம பக்கம் நிறைய இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 சபரிமலை விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.