ஜன -18 பள்ளிகளுக்கு விடுமுறையா?? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்..

 
anbil-mahesh-3

நாளை மறுநாள் ( வரும் 18 ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 15ம் தேதி தைப்பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல்  என 3 நாட்களுமே பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும்..  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன. 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.  

பள்ளி மாணவர்கள்

இந்நிலையில்  நாளை காணும் பொங்கலுடன் விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில் , நாளை மறுநாள் (18ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. பொங்கலையொட்டி மக்கள் அனைவரும் மீண்டும் ஊர் திரும்ப ஏதுவாக விடுமுறை விடப்படுவதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில், சென்னை புத்தகக்கண்காட்சிக்கு வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு, வரும் 18ம் தேதி புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்தார்.