தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறதா ‘ஐக்கியா’ (IKEA) நிறுவனம் ..

 
தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறதா ‘ஐக்கியா’ (IKEA) நிறுவனம் ..


ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்ட  அறைக்கலன் உற்பத்தி நிறுவனமான ‘ஐக்கியா’(IKEA) தமிழ்நாட்டிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி இருக்கிறது.

விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலக அளவில் பிரபலமானது ஐக்கியா நிறுவனம்.  அந்தந்த நாட்டிலேயே தேவையான பொருட்களை தயாரித்து விற்பதில் முன்னிலை வகிக்கும் ஐக்கியா,  ஏற்கனவே இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் தன்னுடைய நேரடி விற்பனை மையங்களை தொடங்கியுள்ளது. அதிலும்  முதன்முறையாக ஹைதராபாத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2018ம் ஆண்டு உற்பத்தி கூடத்தையும் தொடங்கி நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறதா ‘ஐக்கியா’ (IKEA) நிறுவனம் ..

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அறைக்கலன் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடங்க ஐக்கியா(IKEA)நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் மற்றும் சாதக பாதகங்கள் பற்றி,  சமீபத்தில் தாவூசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான தமிழ்நாடு அரசு குழுவுடன்,  ஐக்கியா நிறுவன நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.  அதில் தமிழ்நாட்டில் ஐக்கியா உற்பத்தி ஆலை தொடங்குவது பற்றி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்  தகவல் வெளியாகி இருக்கிறது.