குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு - 68 பேரிடம் விசாரணை

 
tn

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக 68 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

tn

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை  நீர்தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்த விவகாரம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது குறித்து விசாரிக்க வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடந்த 8 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையிலான போலீசார் சுற்றியுள்ள கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு விவகாரத்தில் இதுவரை 68 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் வேங்கை வயல் கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.