மருந்து தட்டுப்பாடு குறித்து 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma su

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.