ஆவின் ஊழியர்கள் 25 பேரின் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை!!

 
high court

ஆவின் ஊழியர்கள் 25 பேரின் பணிநீக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 

aavin

கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ரூ.10 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு 8 மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமை அலுவலகங்களில் பணி நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுக்குறித்து திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ,மதுரை, தஞ்சாவூர் ,நாமக்கல் ,விருதுநகர், திருச்சி ,தேனி, சென்னை ஆகிய பால் உற்பத்தி சங்கங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் பால்வளத் துணை பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது . இதில் 236 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் . குறிப்பாக 26 அதிகாரிகள் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Madras Court

இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் 25 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தனர்.  அதில் அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு ,நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணி நீடிக்கும் நிலையில் எந்த நோட்டீஸும் அளிக்காமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே பணிநீக்கு உத்தரவுக்கு தடை விதித்து பணியில் தொடர் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில்,  வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் எந்த நோட்டீஸும் அளிக்காமல் பணிநீக்கம் செய்தது தவறு என்றும் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் ஆவின் நிறுவனத்திற்கு இது தொடர்பாக பதில் மனு அளிக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் , இந்த வழக்கின் விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.