இந்திய விமானப்படையில் சேர விருப்பமா?? - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

 
 Air Force Station

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ்  01/2023-க்கு அக்னி வீரர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில்  ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது.  இதற்கு விருப்பமுள்ள  திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள்  விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரம் பின்வருமாறு :

துறை  :  இந்திய விமானப்படை
பணியின் பெயர் - Agniveer - அக்னி வீரர்வாயு
வயது வரம்பு   -  17. 5 வயது முதல்  அதிகபட்சம்  21 வயதுக்குள்  இருக்க வேண்டும்.
சம்பளம்       -     மாதம் ரூ.30,000 முதல்  ரூ. 40,000 வரை வழங்கப்படும்.  நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அக்னிபாத் திட்டம்
பணி காலம் : 4 ஆண்டுகள்.
கல்வித்தகுதி :  கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன்  10, +2  தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

அல்லது,  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக்  பொறியியல் பாடப்பிரிவுகளில்   (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..  அல்லது,  தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து முறை தேர்வு ,  சான்றிதழ் சரிபார்ப்பு,  உடல் தகுதி தேர்வு, மருத்து பரிசோதனை  ( Document Verification, eligibility test, physical fitness test, medical examination ) போன்றவை நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் : 07 நவம்பர் 2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23 நவம்பர் 2022
ஆன்லைனில் தேர்வு நடைபெறும்  நாள் : 18.01.2023 முதல் 24.02.2023 வரை.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்  
விண்ணப்பரதாரர்கள்,  https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn என்கிற முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்..