இன்று முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் - இந்த 22 மாவட்டங்களில் இன்று கனமழை

 
cr

தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் வரும் நாலாம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

r

 காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும்,  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ,மயிலாடுதுறை, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.