ஜல்லிக்கட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

 
death

தமிழகத்தில் பல இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.  அலங்காநல்லூர் , பாலமேடு ,அவனியாபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அந்த வகையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 417 காளைகள் பங்கேற்றது . அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் உட்பட 27 பேர் காயமடைந்தனர்.

Jallikattu

காளை முட்டியதில் பள்ளப்பட்டியை சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது.மாடுபிடி வீரர் சிவக்குமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்து இருந்தபோது காளை குத்தியது.

Jallikattu

இந்நிலையில் கரூர் மாவட்டம் ஆர்.டி. மலையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் கண் பார்வை இழந்த இளைஞர் சிவக்குமார் உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் சிவக்குமார் பரிதாபமாக பலியாகி உள்ளார்.