இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

 
corona

இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

india corona
இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று  எண்ணிக்கை  ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால்  மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர் . இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம்  2,841 பேருக்கும், நேற்று 2,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. 

corona

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு13  பேர்  பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை   5,24,214 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 3,355 பேர் குணமான நிலையில் இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 79,693 ஆக உயர்ந்துள்ளது.  

tn

தற்போது வரை இந்தியாவில் பேர் 17,692 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 15,58,119 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை  191.32 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.