ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

 
mutharasan

குடியரசு தின ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது என்று முத்தரசன் அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பலிடமிருந்து பாதுகாத்திட ஜனவரி 26-ம் தேதியை “இந்திய அரசியல் அமைப்புச்சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு” தினமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு அறிவித்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் வரும் ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தேநீர் விருந்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

rn ravi

“தமிழ்நாடு ஆளுநர்” என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் தன் அரசியல் அமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கருத்துக்களையே பேசி வருகின்றார்.

mutharasan

எனவே, அவர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு புறக்கணிக்கின்றது. மேலும் ஜனவரி 26-ம் தேதியன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேசியக் கொடியை ஏற்றி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெறும் என்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அறிவிக்கின்றது" என்று கூறியுள்ளார்.