இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம் - விமான போக்குவரத்துறை அமைச்சகம் நோட்டீஸ்

 
Flight

இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Worried about physical distancing while flying? Here's what airlines are  offering | The News Minute

கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றபோது விமானத்தின் அவசரகால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது. தேஜஸ்வி சூர்யாவுடன் அண்ணாமலையும் பயணித்ததாக தெரிகிறது. இச்சம்பவம், ஒன்றிய அரசின் தலையீட்டால் மூடி மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தொடர் அழுத்தத்தால் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை டிவிட்டரில் விமரித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று டிஜிசிஏ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.