ஆவின் இனிப்புகளின் விலை இன்று முதல் உயர்வு!!

 
ttn

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ttn

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,  ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

tn

இந்நிலையில்  ஆவின் நிறுவனத் தயாரிப்புகளான பால்கோவா ,குலோப் ஜாமுன், மைசூர் பாகு  உள்ளிட்ட சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  ஏற்கனவே பால் , தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் சில பொருட்களின் விலையை ஆவின்  நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஆவின் இனிப்புகளின் விலையானது குறைந்தபட்சம் ரூபாய் ஐந்து முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது.