நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%-ஆக அதிகரிப்பு- ஒன்றிய அரசு

 
paddy

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட நிலையில், 19% ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Central Committee Study on paddy humidity - நெல்லின் ஈரப்பதம் குறித்து  மத்தியக் குழு ஆய்வு | Indian Express Tamil

நடப்பாண்டின் நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளின் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 22 சதவீதம் ஈரபதமான நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டது.

இதை தொடர்ந்து, இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் அவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்து,ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.அதன், அடிப்படையில் நெல் கொள்முதலை 19% வரை உயர்த்தி ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.