வரி ஏய்ப்பு புகார்- தமிழகம் முழுவதும் 35 துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை

 
துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை

தீபாவளியன்று அதிக அளவு விற்பனை நடத்தப்பட்டு கணக்கில் காட்டாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 35 டெக்ஸ்டைல் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, நெய்வேலி, கரூர், திருப்பூர், ஊட்டி நாமக்கல், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி சோதனை நடத்தியது.

it raid, பலகோடி வருமான வரி ஏய்ப்பு.. தமிழகம் முழுவதும் மெகா  ரெய்டு..புதுச்சேரி ஜவுளிகடையிலும் ரெய்டு.! - the income tax department is  investigating a puducherry textile shop ...


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எம்.எல்.எஸ். குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் இரண்டு கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 10:30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முதல்கட்டமாக வரி எய்ப்பு புகார் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக தெரியவந்தது. இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி, துறையூரில் மேக்னா சில்க்ஸ் ஜவுளி கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேற்றி, கடையின் சட்டரை இழுத்து மூடி, சோதனை செய்தனர், வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா,மற்றும் வருவாய் கிடைக்க பெற்றதற்கான விபரங்களை கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டு விசாரணை நடைபெற்றது. 

கடலூர் கே.வி டெக்ஸ் ஜவுளிக் கடையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நாள்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், இங்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் எம். எல். எஸ் குடும்பத்திற்கு சொந்தமான கிரின்ஸ் வணிக வளாகம், கல்வி நிறுவனம், உள்ளிட்ட 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடைப்பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்

இதேபோல் குளித்தலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸிலும் காலை முதலே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.