ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

 
ITRaid

ஆம்பூரில் உள்ள தனியார் காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 

RAID TTN


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சோமலாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி தயாரிக்கும் தொழிற்சாலை(அல்தாப் ஷூஸ்), கஸ்பா பகுதியில் உள்ள ருனாஸ் டேனரி மற்றும் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட  இடங்களில் வருமான வரித்துறை ஆய்வாளர் சந்தோஷ் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சாலையில் வழக்கம் போல பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வெளியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் வாகனங்கள் மட்டும் தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பபட்டு வருகிறது.