சென்னையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

 
RAID TTN

சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

raid

சென்னை கிண்டியில் அலினா என்ற தோல் பொருள் தயாரிப்பு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இதன் கிளை நிறுவனங்கள் குரோம்பேட்டை, பெரிய மேடு உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம்  தோலினாலன ஹேண்ட் பேக், காலணி, ஆடைகள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை அலினா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கிண்டி, குரோம்பேட்டை, பெரியமேடு உள்ளிட்ட 15 இடங்களில் அலினா நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் , முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர். இந்த சோதனை இன்னும் சில தினங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.