மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!!

 
tn

மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருவாய் வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
 

tax

 

 மதுரையில் கிலாட்வே மற்றும் அன்னை பாரத் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில்10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையிடுகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக மதுரை மற்றும் திண்டுக்கல்  அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருவாய் வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

RAID TTN

சமீபத்தில் ராமநாதபுரத்தை சார்ந்த அரசு ஒப்பந்ததாரர்களான செய்யாதுரைக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அத்துடன் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.  வேலுமணிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்களும் சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து வைத்தது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது