பென்னிகுக் சிலை திறப்பு விழா- லண்டன் சென்ற திமுக பிரமுகர்கள்

 
ட்

 அமைச்சர் ஐ. பெரியசாமி, திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்  உள்ளிட்டோர்  லண்டன் சென்றுள்ளனர்.   முன்னதாக அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று சென்றுள்ளனர்.

 மதுரை, தேனி, திண்டுக்கல் , ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தவர் பென்னிகுக்.   அதனால்தான் தென் மாவட்ட மக்கள் பென்னிகுக்கை கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர்.  தங்களது பிள்ளைகளுக்கும் தங்களது நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் பென்னிகுக் பெயரை வைத்து மரியாதை செய்து வருகின்றனர்.

த்

 இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக கூடலூர் லோயர் கேம்ப்பிள் பென்னிகுக்காக மணிமண்டபம் கட்டி ஆறடி உயரத்தில் வெண்கல சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இதே போன்று மதுரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும்,  உத்தம பாளையத்திலும் சிலை எழுப்பட்டிருக்கிறது.

 முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக்கிற்கு அவர் பிறந்த  இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அதன்படி பென்னிகுக் சொந்த ஊரான லண்டனில் உள்ள கேம்பர்ளியில் சிலை நிறுவ லண்டன் வாழ் தமிழர்கள் கேம்பர்ளி நகர் மைய பூங்காவில்  நிர்வாக சட்டப்படி ஒப்புதல் பெறப்பட்டது.   இதன் பின்னர் சிலை திறப்பு விழா வரும் பத்தாம் தேதி அன்று லண்டனில் நடைபெற இருக்கிறது.

 இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி லண்டன் சென்றார்.  அவருடன் தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்னையில் இருந்து லண்டன் சென்றனர்.  முன்னதாக அவர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.