ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், வருத்தத்தை பதிவு செய்ய முடிவு

 
tn

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், வருத்தத்தை பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றதில் இருந்தே மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.   தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியானது என்று அண்மையில் ஆளுநர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  இந்த சூழலில் நேற்று முன்தினம்  சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சமூக நீதி, சுயமரியாதை ,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் ,பெண்ணுரிமை ,மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் , திராவிட மாடல் ,தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர் ,பெருந்தலைவர் காமராஜர் ,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும்என்று ஆளுநர் தவிர்த்து உரையை வாசித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக ,காங்கிரஸ்,  விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.  அத்துடன் முதல்வர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை ஆளுநர் முன்னிலையே தெரியப்படுத்திய நிலையில் ,ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பினார்.  இந்நிலையில் ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் , தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது.

tn

பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் ஒன்பதாம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் பேருரைக்கு இப்ப பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.