கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்களை வாங்க மத்திய அரசு கடனுதவி

 
drone

சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வேளாண் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும், அனைத்து வகையான ட்ரோன்களும்  கிராமங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கு அனுப்பி வயல்கள், வேளாண் நிலங்களில் பூச்சிமருந்து, உரமிடுதலுக்கு பயன்பட வேண்டும் என்ற திட்டங்களுக்காகவே ட்ரோன்களை தயாரித்தது. 

கிசான் ட்ரோன்கள் மூலம் ஒரு நாளைக்கு 25 ஏக்கர் பரப்பளவுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் தெளிக்கலாம். இந்த வகை ட்ரோன்கள் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை 70% சேமிக்கின்றன, நீர் பயன்பாட்டை 80% சேமிக்கின்றன.இந்நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் தோனி பங்குதாரராக உள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் ஏற்கனவே 2500 ஆளில்லா விமானங்களை தயாரிக்க முன்பதிவு செய்திருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டிற்குள் 1 லட்சம் கிசான் ட்ரோன்களை தயாரிக்கவிருப்பதாகவும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறினார்.  இதனிடையே தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2022 இல் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) உடன் கருடா ஏரோஸ்பேஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த ட்ரோன்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா கிசான் ட்ரோனுக்கு அக்ரி இன்ஃப்ரா ஃபண்ட் கடனுதவி வழங்கபட்டுள்ளது. இதன்முலம் சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் கடன் பெற்று ட்ரோன்களை வாங்கலாம். வாங்கப்படும் ட்ரோன்களை பொறுத்து 5% சதவீதம் வட்டியுடன் கடனுதவி 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிகிறது.