சென்னை இலக்கிய திருவிழா இன்று தொடக்கம்

 
mk stalin

stalin

தமிழ்மொழியின்‌ இலக்கிய மரபுகளைக்‌ கொண்டாடும்‌ வகையில்‌ ஆண்டுதோறும் நான்கு இலக்கியத்‌ திருவிழாக்கள்‌ நடத்தப்படும்‌ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொது நூலக இயக்ககம்‌ வாயிலாக தமிழகத்தில்‌  பொருநை சிறுவாணி வைகை மற்றும் காவேரி என நதி நாகரிக மரபு அடிப்படையில்‌ 4 இலக்கியத் திருவிழாக்களும்‌, சென்னையில்‌ ஒரு இலக்கியத்‌ திருவிழாவும்‌ நடத்தப்பட்டு வருகின்றது.

Chennai Ilakkiya Vizha 2023 Date Time Venue How to Participate All Details You Need to Know Chennai Ilakkiya Vizha: 6- ஆம் தேதி தொடங்குகிறது சென்னை இலக்கியத்‌ திருவிழா; நிகழ்ச்சி குறித்த முழு விவரம்!

இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா இன்று தொடங்குகிறது.  விழாவில் எழுத்தாளர்கள் , இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாட உள்ளனர். காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.  இவ்விழாவில் படைப்பு அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம்,  மாணவர்களுக்கென தனி பயிலும் அரங்கம்,  சிறுவர்களுக்கு நம் இலக்கிய உலகை அறிமுகசெய்து வைக்கும் வகையில் கதை, பாடல்‌, நாடகம்‌ வழியாக கடத்தும்‌ வகையில்‌ சிறுவர்‌ சிறுவர் இலக்கிய நிகழ்வுகள் ஆகியவைகள் நடைபெற உள்ளன.