ரூ.10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை- அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

 
bus ticket

ரூபாய் 10 மற்றும் 20 நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரூ.10 போல் ரூ.20 நாணயம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.. மத்திய  பட்ஜெட்டில் அறிவிப்பு! | Rs 20 coins will be made available for public use  shortly: Nirmala sitharaman - Tamil Oneindia

மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டுக்காக 10, 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கும் போது அதனை வாங்க மறுப்பதாக நடத்துனர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்றுக்கொண்டு பயணச் சீட்டை வழங்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயங்களை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.