அண்ணாமலை இல்லை என்றால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது - நீதிபதி புகழாரம்

 
aன்ன்

ஜனநாயகத்தின் பாதுகாவலர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாராட்டி இருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை  நீதிபதி. 
போலி ஆவணங்களை தாக்கல் செய்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்திய பாஸ்போர்ட் பெற்ற வழக்கினை பொது வழியில் கவனத்திற்கு கொண்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன்.   அவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் ஜனநாயகத்தின் பாதுகாவலராக செயல்பட்டு இருக்கிறார் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன்,   மதுரை- திருச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி 1 முதல் 2019 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை போலி ஆவணங்கள் மூலமாக இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளார்கள். 

ம்

 இந்த வழக்கினை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டது.   இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பியதை நாளிதழில் படித்தேன் என்று சொல்லி இருக்கும் அவர்,   

 மேலும் அது குறித்து,    மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் போலி பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.   விரைவில் மதுரை ஐந்தாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.   இந்த குற்ற பத்திரிகையை நீதித்துறை நடுவர் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்றார்.

 அவர் மேலும்,   மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 54 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன .  இந்த காலகட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக டேவிட்சன் ஆசீர்வாதம் இருந்திருக்கிறார் .  ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் நேர்மையானவர் என்று நான் சான்று அளிக்கிறேன்.   அதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகின்றேன்.  அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார்.  அவர் இல்லை என்றால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று கூறியிருக்கிறார்.

நீதிபதியின் இந்த பாராட்டுக்கு பாஜகவினர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.