சிலை கடத்தல்: தப்பியோடிய தரகர் சுரேந்தரை பிடிக்க தனிப்படை

 
si

சென்னை திருவான்மியூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால  பதினைந்து கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.  சிலை  வாங்கும் வியாபாரிகள் போல சென்ற தனிப்படை போலீசார் இந்த சிலைகளை மீட்டு உள்ளனர்.

 சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தரகர் மூலம் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

silai

 ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்திரன் என்கிற தரகர் அந்த சிலைகளை விற்பதற்கு பேசி வந்திருக்கிறார் .   சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.    விற்பனைக்கு வைத்திருக்கும் அந்த சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலை வாங்கும் வியாபாரிகள் போல தரகர் சுரேந்திரரிடம் பேசி வந்திருக்கிறார்கள்.   அதை உண்மை என்று நம்பிய சுரேந்திரன் ஈரோட்டில் இருந்து திருவான்மியூர் வந்திருக்கிறார்.  திருவான்மியூரில் ஜெயராம் தெருவில் இருக்கும் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

 வீட்டில் சென்று பழங்கால சிலைகளை பார்த்ததும் மாறுவேடத்தில் சென்றிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பேச்சில் அவர்கள் போலீசார் என்பதை கண்டு கொண்ட சுரேந்திரன் அங்கிருந்து நைசாக வெளியேறி தப்பி ஓடி இருக்கிறார் .  அதன் பின்னர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்கால சிலைகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருந்ததால் அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

 இந்த சிலைகள் அனைத்தும் ஒரே ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக தான் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் போலீசார்.  வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய வருகின்றனர்.  தப்பி ஓடிய சுரேந்திரனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.