போதையில் இரண்டு பெண்களை கொன்ற ஐடி இளைஞர்

 
ல்ல்

போதையில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற ஐடி இளைஞரால் சாலையை கடக்க முயன்ற அப்பாவி பெண்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.  சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் இரண்டு பெண்கள் சாலையை கடந்து சென்றிருக்கிறார்கள்.   அப்போது ஐடி ஊழியர் மோதிஷ்குமார் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்திருக்கிறார்.  இதில் சாலையை கடக்க முயன்ற பெண்களை அவர் கவனிக்கவில்லை .  

க்

வேகமாக வந்த கார் அந்த பெண்கள் மீது மோதியதும்  அவர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார்கள்.  சம்பவ இடத்தில் துடிதுடித்து கிடந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு இரண்டு பெண்களையும்  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த இரண்டு பெண்களும் அவர்களிடமிருந்த அடையாள அட்டைகள் மூலம் கேரளாவை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி என்றும்,  திருப்பதியை சேர்ந்த லாவண்யா என்பதும் தெரிய வந்திருக்கிறது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததுமே கேரளாவை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.  தீவிர சிகிச்சையில் இருந்த திருப்பதியைச் சேர்ந்த லாவண்யாவும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். 

 சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் மதுபோதையில் கார் ஓட்டிய மோதிஷ்குமார் என்ற 20 வயது  இளைஞரை கைது செய்துள்ளனர்.   மேற்கொண்டு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.