மதுரையில் தகவல் தொழில் நுட்ப ’டைடல் பூங்கா’ அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

 
tn

மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

stalin

மதுரையில்  ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "பாண்டியர் காலத்தில், தமிழ் வளர்க்கப்பட்ட மதுரையில் தற்போது தொழில்துறை வளர்கிறது . புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்மாநிலங்களை சேர்ந்தவை. மதுரையில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் தொழிலாளிகள் பயன் அடைந்து வருகிறார்கள். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும். சம சீரான தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு.

stalin

தமிழகத்தை 2030ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் நோக்கில் இயங்கி வருகிறோம். மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதற்கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதற்கட்டமாக ₹600 கோடி மதிப்பில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட உள்ளது" என்றார்.