பெரும் பரபரப்பு! எழும்பூர் காவல் நிலையம் அருகே ஐடி நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை

 
murder

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப் பகலில் ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகேயுள்ள ஐடி நிறுவனத்தில் விக்கி எ விக்னேஷ் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் இன்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், விக்னேஷை பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று ஐநி நிறுவனம் அருகே விக்னேஷ் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. தப்பிச் செல்லும் போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சரமாரியாக வெட்டப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

murder

இதனையடுத்து விக்னேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக சந்தோஷ் என்பவர் தனது ஆட்களுடன் வந்து ஐடி நிறுவன ஊழியர் விவேக்கை வெட்டிக் கொலை செய்ததாக போலீசாரின் முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.