ஐபிஎல் இன்றைய போட்டியில் ஐதராபாத்-டெல்லி அணிகள் மோதல்

 
srh

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றூ 50வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

SRH

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் தோல்வியை தழுவியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் மீதமுள்ள 5 போட்டிகளில் குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

dc

டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5ல் தோல்வியும், 4ல் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இனி வரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணியால் ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்துள்ள டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.