வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா - ராஜஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

 
RRvsKKR

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 46 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 47வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

RR

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிட முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kkr

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6ல் தோல்வியும், 3 போட்டியில் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள கொல்கத்தா அணி, வெற்றி பெற போராடி வருகிறது. பந்துவீச்சில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.