சிபிசிஐடி விசாரணைக்கு மாறிய ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு

 
sஉ

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.   சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 

 சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.   அவர் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார்.  

இந்நிலையில்,  அந்த மாணவர் தான் தங்கி இருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  இறுதியாண்டு தேர்வில் நான்கு பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அவர் ஸ்கிப்பிங் கயிறு மூலம் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

ஃப்ஃப்

 ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில்  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  

இந்த வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.  கல்வி நிலையங்களில் நடக்கும் தற்கொலைகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .  அந்த உத்தரவின் அடிப்படையில் மாணவர் தற்கொலையை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற செய்யுப் பட்டிருக்கிறது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.