தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி..

 
iit

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  சென்னை ஐஐடி தொடர்ந்து 4வது ஆண்டாக  முதலிடத்தை பிடித்திருக்கிறது.  

நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது.  அதில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது.   இந்த உயர்க்கல்வி நிறுவனங்களுக்காக தேசிய அளவிலான பட்டியலில் கடந்த 3 ஆண்டுகளாகவே  ஐஐடி மெட்ராஸ்  முதலிடம் பிடித்திருந்த  நிலையில்,  4வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.

 பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்  தேசிய அளவில்  சுமார்  1,400 க்கும் மேற்பட்ட  கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.  இந்த தேசிய அளவிலான உயர்க்கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  இடம்பிடித்துள்ள தமிழக கல்வி நிறுவனங்களின்   விவரங்களைப் பார்க்கலாம்.   

சென்னை ஐஐடி

ஒட்டு மொத்த தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள  சென்னை ஐஐடி,  ஆராய்சி நிறுவனங்கள் வரிசையில் 2வது இடமும், சிறந்த பொறியியல் கல்லூரிகள் வரிசையில் முதலிடமும் பிடித்துள்ளது.   மேலும்  அமிர்தா வித்யாஸ்ரம், கோவை 16வது இடமும்,  விஐடி, வேலூர் 18வது இடமும் பிடித்துள்ளது.  சிறந்த  பல்கலைக்கழகங்களில்   அமிர்தா வித்யாஸ்ரம், கோவை (5) , விஐடி, வேலூர் 9வது இடமும்,  பாரதியார் பல்கலைக்கழகம், கோவை  15வது இடமும், கல்லூரிகளில் மாநிலக் கல்லூரி, சென்னை 3வது இடமும்,   லயோலா கல்லூரி, சென்னை  4வது இடமும்,  பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, கோவை 6வது இடமும்  பிடித்துள்ளன.  

இறுதித் தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்

ஆராய்ச்சி நிறுவனங்கள் பட்டியலில்  ஐஐடி, சென்னை ( 2), விஐடி, வேலூர் ( 10),  அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (21) . சிறந்த பொறியியல் கல்லூரிகள்  ஐஐடி சென்னை ( முதல் இடம்) , என்ஐடி திருச்சி ( 8வது இடம்),  விஐடி வேலூர் (12 )  பிடித்துள்ளன.  அதேபோல் பார்மஸி கல்லூரிகளில்  ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி( 6) ,  எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை(12),  அமிர்தா வித்யாஸ்ரம் கோவை ( 14 இடம் ) பிடித்திருக்கின்றன.  மேலும் மருத்துவக் கல்லூரிகளில்  கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர்( 3வது இடம்) , அமிர்தா வித்யாஸ்ரம் கோவை (  8வது இடம்),  சென்னை மருத்துவ கல்லூரி சென்னை  12வது இடமும்  பிடித்துள்ளது.

பல் மருத்துவக் கல்லூரிகளில்  சவீதா கல்லூரி சென்னை - முதல் இடம் பிடித்திருக்கிறது. எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை 8வது இடமும், ராமசந்திர கல்லூரி சென்னை 13வது இடமும் பிடித்திருக்கிறது.  கட்டிடக் கலைக் கல்லூரிகளில் என்ஐடி திருச்சி 5வது இடமும், எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை - 11வது இடமும், தியாகராஜர் கல்லூரி மதுரை 23வது இடமும் பிடித்திருக்கிறது.