நிலாவில் கோவில் கட்டப்போறேன்! ஒப்பந்தப்பணி ஆரம்பமாச்சு! மீண்டும் அலப்பறையை ஆரம்பித்த நித்தியானந்தா

 
னி

கொஞ்ச நாளாக நிறுத்திவைத்திருந்த அலப்பறையை மீண்டும் தொடங்கியிருக்கிறார் நித்தியானந்தா. நிலாவிலும், செவ்வாய் கிரகத்திலும் பரமசிவன் கோவில் கட்டப்போகிறேன் என்கிறார். கைலாசா நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்றும் அவர் சொல்கிறார்.  கைலாசா.. கைலாசா. என்று சொல்கிறாரே தவிர அதுகுறித்த ஒரு போட்டோவையோ, வீடியோவையோ இதுவரைக்கும் அவர் காட்டவே இல்லை.

னினி

 நித்தியானந்த மரணம் அடைந்துவிட்டார் என்றே செய்திகள் பரவின.  அப்புறம்தான் அது வதந்தி அவரே கைப்பட கடிதம் எழுதி இருந்தார்.  கைலாசா, தனி நாடு என்று நித்தம் நித்தம் எதையாவது சொல்லிக்கொண்டிருந்த நித்தியானந்தா திடீரென்று அமைதியானதால் தான் அப்படி வதந்தி பரவியது.  ஆனால், தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  அதற்காக தனது பக்தர்கள் பிராத்தனைகள் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.  தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

கைலாசா என்கிற தனி நாட்டினை உருவாக்கியிருப்பதாக சொல்லும் நித்தியானந்தா நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பின்னர் அங்கு பரமசிவன் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறார்.  கைலாசா நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

 நித்தியானந்தா இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.   ஜூலை 13ஆம் தேதி ஆகிய நாளைய தினம் இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெற இருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன் என்று என்று தெரிவித்திருக்கும் அவர்,  சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கு மங்களம் வழங்க போகும் இந்த குருபூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது என்கிறார்.

க்

 பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும்.  இந்த மூன்று மாத இடைநிறுத்த சமாதியானது அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறந்த ஒரு நிகழ்வாகும் . உங்கள் உயிர் இருப்பில் பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது என்கிறார்.

 சந்திரன்,  செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும் போது அங்கு பரமசிவன் கோவிலையும் நிர்மாணிக்க கைலாச நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது . இதை அடுத்து கைலாச நிர்வாகம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்திற்காக பணிபுரிந்து வரும் நிறுவனங்கள்,  நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது என்கிறார்.

கைலாசா.. கைலாசா. என்று சொல்லிக்கொண்டே வரும் நித்தியானந்தா அதுகுறித்த ஒரு போட்டோவையோ, வீடியோவையோ இதுவரைக்கும் அவர் காட்டவே இல்லை.  அப்படி இருக்கும் போது  நிலாவிலும் செவ்வாய் கிரகத்திலும்  வீடு கட்ட  கைலாசா நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்று சொல்கிறார்.