நான் ஓடி விட்டேனாம்... 43 ஆடியோ கேஸட் இருக்குது.. எச்.ராஜா பரபரப்பு

 
h

கோவை இளைஞர் சிவாவை தற்கொலைக்கு  தூண்டிய விஜி உள்ளிட்ட 43 நபர்களும் உடனடியாக கைது செய்து தண்டிப்பதன் மூலம் அவருக்கு தமிழக அரசு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாவின் மனைவி விஜியை தவறாக பயன்படுத்திய தியாகு, சுப.வி.,  கொளத்தூர் மணி வெளியில் இருப்பது சட்டத்திற்கு அசிங்கம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அன்று  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. 

இந்நிலையில் இன்று,    இந்த ட்வீட்டை நான் நீக்கி ஓடி விட்டேனாம். ஆரிய படையெடுப்பு புளுகுனி சொல்கிறது. இராவணன், தென்னகம் போன்ற U ட்யூப்  சேனல்கள் சிவாவின் 43 ஆடியோ கேஸட்டையும் வெளியிட்டுள்ளனர். டிவி சேனல் செய்தியிலும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.  விசாரணை கேட்பதில் அவதூறு எங்கே வருகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறார் எச்.ராஜா.

t

கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற ரத்னசீலன் .  கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் தற்கொலை செய்து கொண்டார்.   சிவா குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் சிவாவின் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி விஜி பழனிச்சாமி தான் என்பது வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

 திருமணமான விஜி பழனிச்சாமி தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக சிவாவை திருமணம் செய்து கொண்டார் என்றும் அவரை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தள்ளி இருப்பதாகவும் அந்த புகாரில் சிவாவின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.   சிவாவின் தற்கொலைக்கு காரணம் விஜியும் அவரது குடும்பத்தினரும் தோழிகளுமே காரணம் என்றும் அதற்கு  ஆதாரமாக 43 ஆடியோக்களையும் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைத்து இருந்தனர்.

 இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதாக திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் தாமரையும் புகார் தெரிவித்தார்.   தாமரையின் கணவர் தியாகுவுக்கும் விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் தாமரை குற்றம் சாட்டியிருக்கிறார்.

தன்னைவிட ஏழு வயது குறைந்த மணமாகாத அப்பாவி இளைஞனை இளைஞர் சிவாவை ஏமாற்றி திருமணம் செய்து அச்சுறுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டார் விஜி என்கிற  குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார் கவிஞர் தாமரை .

மேலும்,  கோவை இளைஞர் சிவா தற்கொலை விவகாரத்தில் விஜயலட்சுமி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை . திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு உள்ளிட்டோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதால் போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாடலாசிரியர் தாமரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அன்று கேள்வி எழுப்பி இருந்தார் .