சட்டம் ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் காரசார விவாதம்

 
tn

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றிய ஆதாரம் என்னிடம் உள்ளது  என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

MK Stalin

நடப்பாண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , திமுக பொதுக் கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறி விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.  இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்,  பெண் காவலிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

eps

அத்துடன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்ட , எதன் அடிப்படையில் சட்டமூலங்கள் சீரழிவு என ஈபிஎஸ் விளக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்தார்.  அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,  அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி சீரழிந்தது என நான் ஆதாரத்தோடு சொல்வேன் என்று கூறி . அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ; ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் பதில் அளித்தார்.