பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன் - பிரதமர் மோடி ட்வீட்..

 
modi

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.  

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி  திமுக, அதிமுக, பாஜக,  மதிமுக, அமமுக , நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழக அரசியல் தலைவர்கள் பலரும்,  அவரது திருவுருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலையணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.  அதேபோல் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.  

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன் - பிரதமர் மோடி ட்வீட்..

அந்தவகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ பெரும்திப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.  அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார்.