நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்; ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும்- காயத்ரி ரகுராம்

 
gayathri-4

காயத்ரி ரகுராமுக்கும் அண்ணாமலைக்குமான மோதலில் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  பதிலுக்கு திமுகவினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து வரை நடத்துகிறார் என்று காயத்ரி மீது அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். 

ஆமா நீங்கள் எப்ப பாஜகவின் தலைவரானீர்கள்? சொந்த காசில் சூனியம்.. அண்ணாமலை  டீம் மீது காயத்ரி தாக்கு | When You become the BJP Leader? Gayathri Raghuram  Reply to Annamalai's ...

இந்த நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருந்தார் காயத்ரி ரகுராம்.  அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை .  பாஜகவில் இருந்து முழுமையாக தான் நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம்,   என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரை கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி. என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி.  என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி என ஆவேசத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னுடன் போட்டியிடுமாறு அண்ணாமலையை வலியுறுத்திவந்தார். 

இந்நிலையில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நான் நிற்கத் துணிந்தேன். ஆனால் மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிடத் தயாராக இல்லை.உண்மை என்னவென்றால், களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி அல்லது பூத் முகவர் இல்லை, உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்-  நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.