நான் எப்போப்பா பாஜகவுல சேர்ந்தேன்.. அண்ணாமலை சொன்னது சரிதான்.. - லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி..

 
 Lakshmy Ramakrishnan

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியான நிலையில், நான் எப்போது பாஜகவில் சேர்ந்தேன் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பாஜகவில் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன. முதலில் டெய்சி சரண் - திருச்சி சூர்யா சிவா விவகாரம், அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம், காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்,  அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியது என அக்கட்சி தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதற்கிடையே  அண்மையில், தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம்,  கட்சியில் இருந்து  விலகுவதாக அறிவித்தார். அப்போது,  கட்சியில்  அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.  இந்நிலையில் காயத்ரி ரகுராமை தொடர்ந்து   நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும்  பாஜவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

“ Lakshmy Ramakrishnan

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகளும் வெளியானது. இந்நிலையில்  இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் பாஜகவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும். இதுதான் தற்போதைய பத்திரிகைகளின் தரம். நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள். இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. ஊடகங்கள்  தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்து கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க எந்த தகுதியும்  இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.