நான் கிருஷ்ணாவுடன் 3 படங்களில் நடித்தது எப்போதும் போற்றக்கூடிய நினைவுகள் - ரஜினிகாந்த் இரங்கல்

 
r

கிருஷ்ணா காருவின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு.  அவருடன் 3 படங்களில் நடித்தது நான் எப்போதும் போற்றக்கூடிய  நினைவுகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.  மேலும்,  அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

rr

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா(79) காலமானார்.   மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்   ஆபத்தான நிலையில் ஐதராபாத் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சில மாதங்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணாவின் மனைவி காலமாகி இருக்கிறார்.

ra

 தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா.  325 திரைப்படங்களில் நடித்துள்ளார்.   கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ என்கிற படத்தில் நடித்துள்ளார். இவரின் மகன் மகேஷ்பாபு,   தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்.  

k

பழம்பெரும் தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் கிருஷ்ணா.   அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.   கிருஷ்ணாவின் மறைவுக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரங்கல் வெளியிட்டுள்ளா முதல்வர் ஸ்டாலின்.