உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்

 
செல்பி

கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். 

கத்திக்குத்து Archives - GTN

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49).  இவரது மனைவி கிரேஸ் பியூலா (33). திருமணமாகி ஒரு மகள் உள்ளது. எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடியாமையாகி பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கிரேஸ் பியூலா சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது.  அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். 

இதைப்பார்த்த அவரது கணவர் எட்வர்ட், கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அடுத்து மீண்டும் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டுற்கை சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட்  ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் வெட்டியுள்ளார். 

இதை கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அப்போது கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் அழைத்து தகவலை கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.