மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

 
youth murdered

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (42). இவரது மனைவி தீபா(32). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது.

 இந்நிலையில் நேற்று இரவு தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தன் தீபாவை கடுமையாக தாக்கி, அடித்துக் கொலை செய்துள்ளார். இந்நிலையில் இன்று தீபா படுக்கையிலேயே காயங்களுடன் இறந்து கிடப்பது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார் தீபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது வீட்டிலிருந்த தீபாவின் கணவர் ஆனந்தனை  விசாரணைக்காக அண்ணாமலைநகர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஆனந்தன் தனது மனைவி தீபாவை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.