கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்!

 
Murder

ஆண்டிபட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை அரிவாள் மனையால் வெட்டிக்கொலை  செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். 

Murder under Indian Penal Code: All you need to know about it

ஆண்டிபட்டி அருகே குப்பிநாயக்கன்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மனைவி 50 வயதுடைய ராஜாத்தி. 58 வயது உடைய லட்சுமணன் வீரமணி என்ற வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புவைத்து வருவதை அறிந்த ராஜாத்தி கணவனை கண்டித்துள்ளார். ஆனாலும் கணவர் இதனைக் கண்டு கொள்ளாததால் இது சம்பந்தமாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே இன்று அவரது வீட்டிலேயே ராஜாத்தி அரிவாள்மனையால் உடலில் வெட்டியும், சேலையால் கழுத்தை இறுக்கியும் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . இதுகுறித்து கொலை செய்யப்பட்ட ராஜாத்தியின் மகன் ராமகிருஷ்ணன், கண்டமனூர் காவல் நிலையத்தில் கள்ளக்காதலை கண்டித்ததால் தனது தந்தையே தனது தாயை கொலை செய்ததாக இன்று புகார் அளித்தார். இந்தப்புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜாத்தியின் குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக வந்து, கொலைக்கு முக்கிய காரணமாக உள்ள தேனி அல்லிநகரத்தை சேர்ந்த  கள்ளக்காதலி வீரமணி என்ற பெண்ணை கைது செய்யும்வரை   உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.