மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கத்தியால் குத்திய கணவன்

 
murder

ஈரோட்டில் கணவனின் தாக்குதலுக்கு ஆளான மனைவியும், அவரது கள்ள காதலனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குள் புகுந்து மீண்டும் கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

Police ignored UK national's pleas for protection - Newspaper - DAWN.COM


ஈரோடு மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. அதேபகுதியை சேர்ந்த திருமணமாகாத இளங்கோவிற்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த நந்தகோபால் நேற்றிரவு ராஜேஸ்வரி மற்றும் இளங்கோவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மனைவியை காண  நந்தகோபால் மருத்துவமனைக்கு வந்தபோது கள்ளகாதலர்கள் இருவரும் மருத்துவமனையில் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த  நந்தகோபால், இளங்கோவை மீண்டும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளங்கோ உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர  சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அரசு மருத்துவமனை போலீசார் நந்தகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளகாதலனை அரசு மருத்துவமனையில் வைத்தே கணவன் கத்தியால் குத்திய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.