மகள் காதலனுடன் சென்றதால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

 
Death

சிதம்பரம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Four suffocate to death while cleaning sewer in Faridabad, one critical -  Hindustan Times

சிதம்பரத்தை அடுத்த   புதுச்சத்திரம் அருகே உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (65). இவரது மனைவி சுமதி. தம்பதியினர் இருவரும் இன்று வேளங்கிப்பட்டு அருகே உள்ள வயலில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தம்பதியின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் வேளங்கிப்பட்டு கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இறந்த தம்பதியினரின் மகளுக்கு இன்னும் ஒரிரு தினங்களில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள் இவர்களது மகள்  காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் புதுச்சத்திரம் போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.