புதுச்சேரியில் மருமகள், மாமியார் தூக்கிட்டு தற்கொலை; காதல் மனைவி இறந்ததை கண்டு கணவனும் தற்கொலை

 
suicide

புதுச்சேரி திருபுவனை அருகே குடும்ப தகராறு காரணமாக மருமகள், மாமியார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காதல் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்த கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மருமகள் தற்கொலை செய்த செய்தியறிந்து மாமியாரும் விபரீத முடிவு: கணவர்  மருத்துவமனையில் அனுமதி | Mother-in-law suicides after hearing the news of  her daughter-in-law's suicide ...

புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). இவர் டிரைவராகவும், பெயிண்டர் வேலையும் செய்து வந்துள்ளார். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்ற செவிலியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சன்னியாசி குப்பத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி சந்தியா மற்றும்  அம்மா அன்னக்கிளியை கவனித்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். அப்பொழுது அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை ஆனந்து பலமுறை மருமகள், மாமியாருக்கும் தகராறு ஏதும் வராமல்  சமாதானம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சந்தியா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். அப்பொழுது எழுந்து பார்த்த ஆனந்த், மனைவி தூக்கில் தொங்குவதை அறிந்து பதட்டம் அடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மனைவி இறந்து போனதை அறிந்து துக்கம் தாங்க முடியாமல், அதே அறையில் சேலை கொண்டு ஆனந்து தற்கொலைக்கு செய்து கொள்ள முயன்று உள்ளார். இதை பார்த்த அம்மா அன்னக்கிளி மற்றும் உறவினர்கள் ஆனந்துவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு ஆனந்தின் அம்மா அன்னக்கிளி, மருமகள் இறந்த தூக்கம் தாங்க முடியாமலும், மகன் தற்கொலைக்கு முயன்றதால் மனமுடைந்து அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அன்னக்கிளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்து திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமரவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தற்கொலை செய்து கொண்ட மாமியார், மருமகளின் உடலை கைப்பற்றி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.