வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் குதித்த ஹெச். ராஜா! கபடி..கபடி..கபடி..

 
hraja

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வரும் மோடி லீக் கபாடி போட்டியில் இன்று பங்கேற்ற பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கபாடி களத்தில் பாஜகவினரோடு கபடி ஆடினார்.

புதுக்கோட்டை திலகர் திடலில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை  முன்னிட்டு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நேற்று முன்தின முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று மாலை முதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இந்த போட்டியை தொடங்கி வைக்க பாஜக‌ முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா வருகை தந்தார். அப்போது அவர் ஆர் எஸ் எஸ் பயிற்சி பாசறையில் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கபடி போட்டியில் சிறந்து விளங்கியதாக கூறி கபாடி களத்தில் இறங்கி கபாடி ஆடத் தொடங்கினார். ஒருபுறம் எச். ராஜாவும் மறுபுறம் புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் செல்வ அழகப்பனும் களத்தில் இருந்த நிலையில் செல்வம் அழகப்பனை எச் ராஜா ரைடு சென்று பிடித்து வெற்றி அடைந்தார். பின்னர் அவரை பாஜகவினர் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

பின்னர் கபாடி போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் கடந்த இரு தினங்களாக 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இன்று இறுதி சுற்றுகள் நடைபெற்று வருவதால் கபாடி அணிகளை சேர்ந்த வீரர்கள் மும்முறமாக போட்டி போட்டு தீரத்துடன் கபாடி விளையாடி வருகின்றனர்.  மேலும் இந்த கபாடி போட்டியில் வெற்றி அடையும் அணியினர் வருகின்ற 27ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகைக்குள்ள கபாடி போட்டியில் பங்கேற்க உள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கபாடி போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.