10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை- விண்ணப்பிப்பது எப்படி?

 
school

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விவரம் மற்றும் அவர்களது வங்கி கணக்குகளை சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  


அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றம் அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப் பாடப்பிரிவு நீங்கலாக) 10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரது எண்ணிக்கை விவரங்களுடன்,  மாணவர்களின் பெயரிலான வைப்பீடு பத்திரங்கள் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் ( TamilNadu Power Finance and Infrastructure Development Corporation Limited)-ஆல் வழங்கப்பட உள்ளது.

எனவே மேற்படி வைப்பீடு பத்திரத்தில் மாணவ, மாணவியரின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட வகுப்பு வாரியாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களைக்  மாறுபாடு இன்றி  jdvocational@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  


மாணவர்களின் தகவல்களை பெறும் போது, எந்த தகவலும் விடுபட்டு விடாமலும், வங்கி கணக்கை சரியாகவும், சேமிப்பு கணக்கு எண். IFSC CODE, MICR NO போன்றவற்றை தெளிவாக குறிப்பிடுதல் உள்ளிட்ட  வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.