சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹1,000-ஐ தாண்டியது!

 
cylinder

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

cylinder

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படு.ம் அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை,   மார்ச் மாதத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனையானது.  கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாயாக இருந்தது.

cylinder

இந்நிலையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.