ஆவின் பால் பாக்கெட்டில் மிதந்த ‘ஈ’.. அதிர்ச்சியடைந்த நுகர்வோர்..

 
Aavin

மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின்  பால் பாக்கெட்டில் ‘ஈ’ மிதந்து கொண்டிருந்து கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியானதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை,  மதுரை, சேலம் என நாடு முழுவதில் இருந்தும்   நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  ஆவினில்  விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இந்தவகையில்  மதுரை ஆவின் சார்பில்  கவ், கோல்டு, எஸ்.எம்., - நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட்  ஆகிய 5  வகை பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 

avin

நாள் ஒன்றுக்கு 5  லட்சத்திற்கும் அதிகமான பால் பாக்கெடுக்கள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. மதுரையில்  40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு இவை வினியோகம் செய்யப்படுகின்றன. அந்தவகையில்  ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்துார் உள்ளிட்ட டெப்போக்களில் ஆவின்  பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. 

Aavin

அதன்படி காமராஜர் பல்கலைக்கு அருகே உள்ள டெப்போவில்  விநியோகிக்கப்பட்ட  பால் பாக்கெட்டில் ‘ஈ’ இறந்து மிததுள்ளது.  பெண் நுகர்வோர் வாங்கிய  அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற  பால்  பாக்கெட்டிற்குள், 'ஈ' இறந்து தகவலறிந்து  நிகழ்விடத்திற்கு வந்த  ஆவின் அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்றுக்கொண்டு , ஈ மிதக்கும் பால் பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம்'  என்று   டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.