திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

 
ட்ம்

 தொடர் கனமழையினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியில் 16.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது மாவட்ட முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார். 

ர்ர்

 வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.  அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றைக்கு இன்றைக்கும்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  மூன்று மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதே போல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.